. . .

Tag: news

நாளை மக்களை தேடி முகாம்

Trichy News

திருச்சி  : திருச்சி வருவாய்த்துறை சார்பில் திருச்சி(கிழக்கு)- தேவதானம் மற்றும் சிந்தாமணி. திருச்சி(மேற்கு)_ பிராட்டியூர் மேற்கு, திருவெறும்பூர்-அரசங்குடி, ரங்கம்- முடிகண்டம், மணப்பாறை- அணியாப்பூர், மருங்காபுரி அக்கியம்பட்டி, லால்குடி- குமுளூர், மண்ணச்சநல்லூர்- மேல்பந்து, முசிறி- மாவிலிப்பட்டி, துறையூர்-நடுவலூர், தொட்டியம்-எம்.களத்தூர் ஆகிய கிராமங்களில் தாசில்தார், வருவாய்துறை அலுவலர்கள் தலைமையில் மக்களை தேடி முகாம்  நாளை (9ம் தேதி) நடைபெறுகிறது. SOURCE : Dinakaran  

திருச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

trichy news

திருச்சி திருச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:- உதவித்தொகை வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30-9-2015 அன்று 5 வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி […]

அக். 10-ல் மண்ணச்சநல்லூரில் குடும்ப அட்டைகள் பதிவு மாற்ற முகாம்

trichy news

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் குடும்ப அட்டைகளில் பதிவு மாற்றங்கள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் (அக். 10) சனிக்கிழமை நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார். மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள 74 குடிமைப் பொருள் அங்காடிகளில் பொது விநியோகப் பொருள்கள் பெறும் குடும்ப அட்டைகளில், தேவையான பதிவு மாற்றங்கள் மேற்கொள்வதற்காக இந்த முகாம் நடைபெறுகிறது. மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடைபெறும். மண்ணச்சநல்லூர் […]

சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு நாளை திருச்சி வருகை

Trichy News

தமிழக சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினர் வெள்ளிக்கிழமை (அக்.9) திருச்சியில் வருகின்றனர் என மாவட்ட நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், உறுதிமொழிக் குழுத் தலைவருமான ஏ.கே. போஸ் தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.கே. அசோக், க. அன்பழகன், அ. அஸ்லம் பாஷா, இரா. குமரகுரு, ராமஜெயம், செ.கு. தமிழரசன், க. பீம்ராவ், சு. மாதேஸ்வரன், மு. ராஜநாயகம் ஆகியோரடங்கிய சட்டப்பேரவை உறுதி மொழிக் குழுவினர் அக். 9-ம் தேதி திருச்சி வருகின்றனர். […]

லால்குடி, புள்ளம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

Trichy News

திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் புள்ளம்பாடி வட்டாரங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அக். 10, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார். லால்குடி வட்டாரத்துக்கான முகாம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அக். 10-ம் தேதியும், புள்ளம்பாடி வட்டாரத்துக்கான முகாம் புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அக். 17-ம் தேதியும் நடைபெறும். இந்த முகாம்கள் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1 மணி வரை நடைபெறும். எலும்பு முறிவு […]

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணி அக். 11-ல் சிறப்பு முகாம்

trichy news

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணியையொட்டி, திருச்சி மாவட்டத்தில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (அக். 11) சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணி செப். 15-ம் தேதி தொடங்கி அக். 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வாக்குச் சாவடி மையங்களில் உள்ள வாக்காளர் பெயர் பட்டியலை பொதுமக்கள் […]

குறுவை நெல் கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்கள் திறப்பு

திருச்சி: திருச்சியில், குறுவை நெல் அறுவடை சீஸன் துவங்கியுள்ளதால், மாவட்டத்தில், துறையூர், லால்குடி தாலுகாக்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், நேற்று திறக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில், மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளில், 2,00க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இதில், லால்குடியை அடுத்த டி.கல்விக்குடி, கே.வி. பேட்டை, ஆலங்குடி, மகாஜனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெல் அறுவடை துவங்கியுள்ளது. இந்நிலையில், மாவட்ட முழுவதும் […]

துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவிலில் பொன்னூஞ்சல் விழா

Trichy News

துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவிலில் பொன்னூஞ்சல் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பூதநாயகி அம்மன் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் பூதநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 98 கிராம மக்களுக்கு குடிபாட்டு தெய்வமாக உள்ளது. இங்கு கடந்த 8 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடத்திட கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 22–ந்தேதி […]

கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் வளாக நேர்காணல்

Trichy News

திருச்சி : திருச்சி கே,ராமகிருஷ்ணன் பொறியியல், தொழில்நுட்பக்கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. திருச்சி சமயபுரம் கே.,ராமகிருஷ்ணன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரிகளில்  விப்ரோ டெக்னாலஜிஸ் வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பணிவாய்ப்பு பெற்றனர். கல்வியாண்டின் தொடக்கத்திலேயே 160க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் டாடாகன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ டெக்னாலஜிஸ், ஐநாடிக்ஸ் டெக்னாலஜிஸ் போன்ற எம்என்சி நிறுவனங்களில் பணிவாய்ப்பினை பெற்றுள்ளனர். இவர்களது ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்து 30ஆயிரத்திற்கும் அதிகம். வேலைவாய்ப்பு பெற்ற […]

திருச்சி கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் போக்குவரத்து நெரிசலால் மாணவ, மாணவிகள் கடும் அவதி

trichy news

திருச்சி நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குபீவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர். கொட்டி தீர்த்த கனமழை திருச்சியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை பகலில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. ஆனால் மாலையில் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் […]