. . .

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணி அக். 11-ல் சிறப்பு முகாம்

trichy news

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணியையொட்டி, திருச்சி மாவட்டத்தில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (அக். 11) சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணி செப். 15-ம் தேதி தொடங்கி அக். 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

வாக்குச் சாவடி மையங்களில் உள்ள வாக்காளர் பெயர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டு, பெயர் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். புதிய உறுப்பினர்களை சேர்க்க அல்லது திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர், உரிய படிவங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

SOURCE : Dinamani