மகாமகத்தையொட்டி இன்று சிறப்பு ரயில்கள்.

திருச்சி : கும்பகோணம் மகாமகத்தை முன்னிட்டு  இன்று மட்டும் மேலும் சிறப்பு ரயில்களை இயக்க போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி தஞ்சாவூர்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண் 07684) தஞ்சாவூரில் இருந்து இன்று காலை 9.40 மணிக்கு புறப்பட்டு 11.25 மணிக்கு மயிலாடுதுறைக்கு சென்றடையும். மயிலாடுதுறை-தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண் 07685) மயிலாடுதுறையில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்றடையும். தஞ்சாவூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்( வண்டி எண் 07688) தஞ்சாவூரில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும். இந்த ரயில்கள் தஞ்சாவூர் மயிலாடுதுறை இடையே உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

இதே போல மயிலாடுதுறை- திருச்சி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்(வண்டி எண் 07689) மயிலாடுதுறையில் இருந்து மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு மாலை 6.25 மணிக்கு திருச்சி ரயில்நிலையத்திற்கு வந்து சேரும். இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் இடையே உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும், பின்னர் பூதலூர், திருவெறும்பூர் ரயில்நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். மேலும் விழா காலத்தையொட்டி நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இந்த சிறப்பு ரயிலுக்கு பொருந்தும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுimages

Source : Dinakaran

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*