தென்னக ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருச்சி, :  இம்மாதம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் தேதிகள் குறித்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வண்டி எண் 06001 சென்னை எழும்பூர்- திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் 22 மற்றும் 29ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

வண்டி எண் 06016 எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் 21 மற்றும் 28ம் தேதியில் இயக்கப்படும். இந்த ரயில் அலுவா, திருச்சூர், ஒட்டபாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் மட்டும் நின்று செல்லும். வண்டி எண் 82603 நெல்லை-சென்னை எழும்பூர் சுவிதா ஸ்பெஷல் ரயில் 24 மற்றும் 31ம் தேதியில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பழம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.  வண்டி எண் 06010 புதுச்சேரி-சண்ட்ராகாசி சிறப்பு ரயில் 23 மற்றும் 30ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், குண்டூர், நெல்லூர், ஓங்கல், சிராலா, டினாலி, விஜயவாடா, எழுரு, தாடிபள்ளிகூடம், ராஜமுந்திரி, சமால்கோட், டூவ்வாடா, ஸ்ரீகாகுளம் ரோடு, பளசா, பிரம்மபூர், குர்டா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், பட்ராக், பளசூர் மற்றும் கராக்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

source : Dinakaran

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*