தூய்மை நகரங்கள் தரவரிசை பட்டியலில் திருச்சிக்கு 3-ம் இடம்.

‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் நாட்டிலேயே தூய்மையான நகரங்கள் பட்டியலில் திருச்சிக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. கடந்த முறை 2-வது இடத்தில் இருந்தது நினைகூரத்தக்கது.

இந்தியாவில் தூய்மையான நகரங்கள் பட்டியலை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டார்.

அந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த நகரங்கள்:

1. மைசூர்

2. சண்டிகர்

3. திருச்சி

4. டெல்லி

5. விசாகபட்டிணம்

6. சூரத்

7. ராஜ்கோட்

8. கேங்டாக் (சிக்கிம்)

9. பிம்ப்ரி சிந்துவாத் (மகாராஷ்டிரா)

10. மும்பை

இந்தப் பட்டியலில், மதுரை 34-வது இடத்தையும், சென்னை 36-வது இடத்தையும் பிடித்துள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை விளம்பரப்படுத்த முக்கிய பிரமுகர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதன்படி நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் பலர் பங்கேற்று செயல்படுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, தூய்மையான நகரங்கள் குறித்த ஆய்வை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நடத்தி தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. முதல் முறையாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

source : http://tamil.thehindu.com/

trichy_2738010f

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*