. . .

திருச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

trichy news

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:-

உதவித்தொகை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30-9-2015 அன்று 5 வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் தகுதி உடையவர்கள் ஆவார்கள். மேலும் மாற்றுத்திறனாளிகளில் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் முதல் பத்தாம் வகுப்பு வரை, மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30-9-2015 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர்கள் ஆவார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டத்தின் கீழ் எந்தவித உதவி தொகையும் பெறுபவராக இருக்க கூடாது.

எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதுமில்லை.

விண்ணப்பம் செய்யலாம்

எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முறையாக சேர்ந்து படிப்பவராக இருக்க கூடாது. எனவே தகுதி வாய்ந்த பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்வி சான்றுகள் மற்றும் குடும்ப அட்டையினை பார்வைக்கு அளித்து வருகிற 30-11-2015 வரை முற்பகலில் விண்ணப்பத்தினை திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஏற்கனவே விண்ணப்பித்து உதவி தொகை தொடர்ந்து பெற்றுக்கொண்டு வரும் பயனாளிகளில் 2015-16 ம் நிதியாண்டிற்கான சுய உறுதி மொழி ஆவணப்படிவத்தினை அளிக்காதவர்கள் தற்போது பூர்த்தி செய்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SOURCE : Dailythanthi