. . .

சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு நாளை திருச்சி வருகை

Trichy News

தமிழக சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினர் வெள்ளிக்கிழமை (அக்.9) திருச்சியில் வருகின்றனர் என மாவட்ட நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், உறுதிமொழிக் குழுத் தலைவருமான ஏ.கே. போஸ் தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.கே. அசோக், க. அன்பழகன், அ. அஸ்லம் பாஷா, இரா. குமரகுரு, ராமஜெயம், செ.கு. தமிழரசன், க. பீம்ராவ், சு. மாதேஸ்வரன், மு. ராஜநாயகம் ஆகியோரடங்கிய சட்டப்பேரவை உறுதி மொழிக் குழுவினர் அக். 9-ம் தேதி திருச்சி வருகின்றனர்.

காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அரசுத் துறைகளின் மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளனர். பின்னர், சில பகுதிகளை குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வர் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SOURCE : Dinamani