. . .

கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் வளாக நேர்காணல்

Trichy News

திருச்சி : திருச்சி கே,ராமகிருஷ்ணன் பொறியியல், தொழில்நுட்பக்கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. திருச்சி சமயபுரம் கே.,ராமகிருஷ்ணன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரிகளில்  விப்ரோ டெக்னாலஜிஸ் வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பணிவாய்ப்பு பெற்றனர். கல்வியாண்டின் தொடக்கத்திலேயே 160க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் டாடாகன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ டெக்னாலஜிஸ், ஐநாடிக்ஸ் டெக்னாலஜிஸ் போன்ற எம்என்சி நிறுவனங்களில் பணிவாய்ப்பினை பெற்றுள்ளனர். இவர்களது ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்து 30ஆயிரத்திற்கும் அதிகம். வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்கள் பட்டியலை விப்ரோ மேலாளர் ரசித் கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி முகமது ஜான்ஷாநவாஸ்சிடம் வழங்கினார். வேலைவாய்ப்பு பெற்ற மாணவ மாணவிகளை கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

SOURCE : Dinakaran