அரிஸ்டோ மேம்பாலம் பகுதியில் 3 மீட்டராக குறுகிய சர்வீஸ் சாலை

திருச்சி :  திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ ரயில்வே மேம்பாலம் பணிகள் ரூ.81.40 கோடி மதிப்பில் துவங்கப்பட்டு தற்போது நடை பெற்று வருகிறது. 7 வழிகளுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் மிக பிரமாண்டமான அளவில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2014 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இப்பணிகள் 2 கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதில் முதல் கட்ட பணிகள் முடிவடையும் நிலையை நெருங்கி கொண்டு வந்தாலும் இணைப்பு சாலை பணிகள் மட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதற்கிடையில் அதிமுக ஆட்சிகாலம் முடிவடைய உள்ளதால் அவசரமாக பாலத்தின் ஒரு வழியான திண்டுக்கல்சலை-ஜங்ஷன் வழி திறக்கப்பட்டது. அதுவும் இரவு நேரங்களில் மூடப் பட்டு விடும்.

இந்நிலையில் பாலத்தின் அடியில் மன்னார்புரம் பகுதியில் இருந்து அரிஸ்டோ ரவுண்டானா நோக்கி செல்லும் போது இடப்புறம் திண்டுக்கல் சாலையில் ரயில்வே பயிற்சி மையம், கூட்டுறவு பண்டகசாலை, அலுவலர்கள் கிளப், குடியிருப்பு உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த பகுதியில் இணைப்பு சாலை பணிகளுக்காக ரயில்வே நிர்வாகத்திடம் சுமார் 5,600 சதுரமீட்டர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதுகுறித்து பலமுறை தொிவிக்கப்பட்டும் ரயில்வே நிர்வாகம் நிலம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ரயில்வே நிர்வாகம் பல்வேறு காரணங்களை காட்டி நிலம் தராமல் இழுத்தடித்து வருகிறது.

இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறையினர் ரயில்வே கோட்ட மேலாளரை இருமுறை சந்தித்து விளக்கம் அளித்தனராம். இருப்பினும் இதுவரை முறையான பதில் இல்லையாம். இதனால் பொறுத்து பார்த்த நெடுஞ்சாலைத்துறையினர் தற்போது அங்கு இருக்கும் இடத்தை வைத்து 3 மீட்டர் அகலத்தில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகளை தொட ங்கியுள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். இதனால் தினசரி போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுவதுடன், விபத்துக்களும் தொடர் கதையாகிவிடும்.

ரயில்வே இடம் தராததால்தான் பொன்மலை ஜிகார்னர் பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் கைவிடப்பட்டது. இதைபோல, தற்போது அரிஸ்டோ ரவுண்டானா பகுதியி லும் இணைப்பு சாலை பணிகள் முடக்கப்படும் நிலை உள்ளதாகவும், எனவே பொது நலனை கருத்தில் கொள்ளாமல் அரசு நிறுவனமே இதுபோல் முட்டுக்கட்டையாக இருப்பது நியாயம் தானா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

see more http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=549680&cat=504

head_photo03

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*