. . .

அக். 10-ல் மண்ணச்சநல்லூரில் குடும்ப அட்டைகள் பதிவு மாற்ற முகாம்

trichy news

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் குடும்ப அட்டைகளில் பதிவு மாற்றங்கள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் (அக். 10) சனிக்கிழமை நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள 74 குடிமைப் பொருள் அங்காடிகளில் பொது விநியோகப் பொருள்கள் பெறும் குடும்ப அட்டைகளில், தேவையான பதிவு மாற்றங்கள் மேற்கொள்வதற்காக இந்த முகாம் நடைபெறுகிறது. மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடைபெறும்.

மண்ணச்சநல்லூர் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் கோருதல் உள்ளிட்டவைகளுக்கு இந்த முகாமில் மனு அளித்துத் தீர்வுப் பெறலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

SOURCE : Dinamani