யார் காலாவதியானவர்கள் என்று ஆர்.கே.நகரில் தெரிந்துவிட்டது டிடிவி தினகரன் பேட்டி

திருச்சி, மார்ச் 15: யார் காலாவதியானார்கள் என்று ஆர்.கே.நகரில் தெரிந்து விட்டது என்று டிடிவி தினகரன் திருச்சியில் நிருபர்களிடம் கூறினார்.மதுரை மேலூரில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள டிடிவி தினகரன் எம்எல்ஏ சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, எங்கள் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியது தொடர்பாக அதிமுகவினர் மேல்முறையீடு சென்றால் செல்லட்டும். நாங்கள் முறைப்படி அனுமதி வாங்கியுள்ளோம். நான் ஆரம்பத்திலிருந்தே தனிகட்சி என்று சொல்லவில்லை. தனி அமைப்பாக தான் செயல்பட்டு வருகிறோம். கூட்டுறவு சங்க தேர்தலில் நிச்சயமாக நாங்கள் போட்டியிடுவோம். இந்த அரசாங்கம் விதிமீறிய அரசாங்கம். துரோக அரசாங்கம். இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆர்.கே.நகரில் யார் காலாவதியானவர்கள் என்பது தெரிந்துவிட்டது. இரட்டை இலையை தோற்கடித்தது ஆளுங்கட்சியினர் தான். ஏழு மாதமாக பெயர் இல்லாமல் இருந்தது. தற்போது நீதிமன்ற அனுமதியோடு நாளை (இன்று) எங்கள் அமைப்புக்கு பெயர் வைக்கிறோம் என்றார்.


Source: திருச்சி – Dinakaran

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*