மண்ணச்சநல்லூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மண்ணச்சநல்லூர், மார்ச் 15:  மண்ணச்சநல்லூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மண்ணச்சநல்லூர் லயன்ஸ் சங்கம், ஜீயபுரம் உட்கோட்ட காவல் துறை, மண்ணச்சநல்லூர் காவல் நிலையம், ரங்கம் வட்டார போக்குவரத்து துறை  சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் பெட்ரோல் பங்க் அருகே   நடந்த பேரணிக்கு  லயன்ஸ் சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் முன்னிலை  வகித்தார். ஜீயபுரம் உட்கோட்ட காவல் துறை துணைத்தலைவர் சீனிவாசன் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து சிறப்புரையாற்றி  பேரணியை துவக்கி வைத்தார். ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் சாலை பாதுகாப்பு விதிகள், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பேசினார். இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.  முன்னதாக எஸ்ஐ மோகன்ராஜ் வரவேற்றார். ஜீயபுரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோபிநாத் நன்றி கூறினார்.


Source: திருச்சி – Dinakaran

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*