திருச்சி,மார்ச்14: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து வருகிற 17ம் தேதி வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமானது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் காஜாமலை வளாகத்தில் தொடங்கவுள்ளது. இதில் தென்னிந்திய மாநிலங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கே ற்க உள்ளன. இம்முகாமில் 2,500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடை பெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் செயல்முறை இணையாளர் நிதி மற்றும் கணக்காளர், நிறுவன அமைப்பாளர், வாடிக்கையாளர் சேவை நிர்வாகி, தகவல் பதிவாளர், விற்பனை அபிவிருத்தி மேலாளர், செவிலியர், உடற்பயிற்சி நிபுணர், விற்பனை மேலாளர், விற்பனையாளர், தகவல் உள்ளீடு இயக்கு பவர், உடற்கல்வி ஆசிரியர்கள் (பிஇடி) (பெண்கள்),வன்பொருள் மற்றும் வலை யமைப்பாளர், கனிணி உதவியாளர், பொறியாளர், தொலைப்பேசி தொடர்பாளர், இணையதள விற்பனையாளர், விற்பனை நிர்வாகி, இணையதள வடிவமைப்பாளர், பிரயோக சேவை உருவாக்குபர், இளநிலை கணக்காளர், மருந்தாளுனர், மருந்தக பயிற்சியாளர், மருந்தக உதவியாளர், இணை பயிற்சியாளர், பகுதி மேலாளர், விற்பனையாளர், தொழில்நுட்ப வல்லுனர், மேற்பார்வையாளர்கள், விற்பனை அதிகாரி, ஊக்குவிப்பவர், நிர்வாகி மற்றும் பணியாளர் பயிற்சி ஆகிய பணிகளுக்கு ஆள்சேர்ப்பு செய்வதற்கு பிரபல நிறுவனங்கள் பங்குபெற உள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் இளநிலை அல்லது முதுநிலையில் தேர்ச்சி பெற்ற மற்றும் இறுதியாண்டு பயிலும் அனைத்து துறைகளை சார்ந்த மாணவர்களும், பத்தாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு, டிப்ளமோ ஆகிய படிப்புகள் படித்த அனைத்து மாணவர்களும், பங்குபெறலாம். இம்முகாமில் மாற்றுதிறனாளிகளும் கலந்து கொள்ளலாம். ஒரு சில நிறுவனங்கள் மாற்றுதிறனாளிகளுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க ஆர்வமாக உள்ளனர். விருப்பமுள்ள மாணவர்கள் வருகிற 17ம் தேதி அன்று காலை 9 மணியளவில் இம் முகாமில் கலந்து கொள்ள தங்களது சுயவிபரங்கள் (பயோடேட்டா – குறைந்தது ஆறு ஜெராக்ஸ் காப்பி) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டுவர வேண்டும். மேலும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள் நேர்முகத் தேர்வு, துறைசார்ந்த கலந்தாய்வு, தகுதி தேர்வு ஆகியவற்றில் கலந்துக்கொள்வதற்கு தயாராக வர வேண்டும். பணிகளின் விபரம் மற்றும் நிறுவனங்களின் விபரங்களை தெரிந்து கொள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ள லாம். (http;//www.bdu.ac.in/ptc/notification.php).இம்முகாமிற்கு பதிவு கட்டணம் இல்லை. மேலும் விபரங்களுக்கு பாரதிதாசன் பல்லைக்கழக ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா, காஜாமலை வளாகம், திருச்சி-23 (ptc@bdu.ac.in அல்லது 8098002828) தொடர்பு கொள்ளலாம் என பாரதிதாசன் பல்லைக்கழக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: திருச்சி – Dinakaran
Leave a Reply