பள்ளி ஆண்டு விழா

தா.பேட்டை, மார்ச் 15:  முசிறி அடுத்த திண்ணக்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கிளாரா தலைமை வகித்தார்.  வட்டார வளமைய மேற்பார்வையாளர் மணிவண்ணன், சிறப்பாசிரியர் மதுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முசிறி ஆர்டிஓ ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.  ஊர் முக்கியஸ்தர்கள் ரமேஷ், அருள்குமார், தங்கமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் குமாரலிங்கம் வரவேற்றார். உதவி ஆசிரியை ஜெரினாபேகம் நன்றி கூறினார்.


Source: திருச்சி – Dinakaran

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*