நூறுநாள் வேலை தொழிலாளர்கள் சாலைமறியல் போராட்டம் வாபஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

துறையூர், மார்ச் 15: துறையூர் அருகே வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்த நூறுநாள் வேலை திட்ட தொழிலாளர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலைமறியல் வாபஸ் பெறப்பட்டது. துறையூர் அடுத்த த.பாதர்பேட்டையில் 100நாள் வேலை திட்டத்தில் பணிநாட்கள் குறைக்கப்பட்டதை கண்டித்தும், தளுகையில் இருந்து பாதர்பேட்டைசெல்லும் சாலையை  உடனடியாக சீரமைக்க கோரியும்  100 நாள்வேலை திட்ட அடையாள அட்டையை திருப்பி ஒப்படைத்து சாலைமறியல் நடத்தப்போவதாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் அறிவித்திருந்தது. அதையடுத்து தளுகை ஊராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, மனோகரன், முசிறி டிஎஸ்பி சீத்தாராமன், துறையூர் இன்ஸ்பெக்டர் மனோகரன், விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த முத்துகுமார், திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் அடையாள அட்டை  வைத்துள்ளவ அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்குவது. மாற்றுதிறனாளிகளுக்கு முழு ஊதியத்துடன் வேலை வழங்கப்படும். 15 நாட்களுக்குள் சாலை சீரமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.


Source: திருச்சி – Dinakaran

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*