தாமரைப்பாடி-கல்பட்டிசத்திரம் இடையே இருவழிப்பாதை இன்ஜினியரிங் பணி ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி, மார்ச் 14:  மதுரை கோட்டத்திற்குட்பட்ட தாமரைப்பாடி-கல்பட்டிசத்திரம் இடையே இருவழிப்பாதை பணிக்காக இன்ஜினியரிங் பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வண்டி எண்.56821/56822 மயிலாடுதுறை-திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் திண்டுக்கல்-திருச்சி-திண்டுக்கல் இடையே இன்று(14ம் தேதி), வரும் 24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. வண்டி எண். 56822 மயிலாடுதுறை-திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் நாளை (15ம் தேதி) திண்டுக்கல் ரயில்நிலையத்தில் 11.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1.05 மணிக்கு புறப்படும். இதன் காரணமாக திருச்சி ரயில்நிலையத்திற்கு 1 மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக வந்து சேரும். வண்டி எண். 56822 மயிலாடுதுறை-திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் நாளை மறுநாள் 16ம் தேதி திண்டுக்கல் ரயில்நிலையத்தில் 11.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 12.25 மணிக்க புறப்படும். இதன் காரணமாக திருச்சி ரயில் நிலையத்திற்கு 1 மணி நேரம் தாமதமாக வந்து சேரும். வண்டி எண். 56822 மயிலாடுதுறை-திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் வரும் வரும் 25தேதியில் இருந்து 27ம் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 11.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1 மணிக்கு புறப்படும். இதன் காரணமாக திருச்சி ரயில் நிலையத்திற்கு 95 நிமிடம் தாமதமாக வந்து சேரும்.  வண்டி எண்.(16352) நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் மாற்று வழி தடத்தில் இயக்கப்படுவதால் வரும் நாளை திருச்சி ரயில்நிலையத்திற்கு 1 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக வந்து சேரும். வண்டி எண்.16128 குருவாயூர்/தூத்துக்குடி- சென்னை எழும்பூர் இணைப்பு ரயில் நாளை(15ம் தேதி) கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படுவதால் திருச்சி ரயில்நிலையத்திற்கு 25 நிமிடம் தாமதமாக வந்து சேரும்.  வண்டி எண்.16128 குருவாயூர்/தூத்துக்குடி -சென்னை எக்மோர் இணைப்பு ரயில் வரும் 24ம் தேதி கட்டுப்படுத்தப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக திருச்சி ரயில்நிலையத்திற்கு வந்து சேரும். வண்டி எண்.16532 நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் கட்டுப்படுத்தப்பட்டு வரும் 15ம் தேதி 1.15 மணி நேரம் தாமதமாக தாமதமாக திருச்சி ரயில்நிலையத்திற்கு வந்து சேரும். இதே போல வண்டி எண்.16128 குருவாயூர்/தூத்துக்குடி-சென்னை எழும்பூர் இணைப்பு ரயில் கட்டுப்படுத்தப்பட்டு 1.15 மணி நேரம் தாமதமாக வந்து சேரும் என அதில் கூறப்பட்டுள்ளது. தஞ்சை-சோளகம்பட்டிஇதே போல தஞ்சை-சோளகம்பட்டி இடையே இன்ஜினியரிங் பணி நடைபெற உள்ளதால் வண்டி எண்.56822 திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் நேற்று (13ம் தேதி) முதல் 27ம் தேதி வரை  திருநெல்வேலியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் திருச்சி-மயிலாடுதுறை இடையே மேற்கண்ட தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.  வண்டி எண். 56821 மயிலாடுதுறை-திருநெல்வேலி பயணிகள் ரயில் மயிலாடுதுறையில் இருந்து 11.25 மணிக்கு புறப்படுவது வழக்கம். இந்த ரயில் வரும் நேற்று முதல் (13ம் தேதி) 27ம் தேதி வரை மயிலாடுதுறை-திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.


Source: திருச்சி – Dinakaran

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*