உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மதிப்புக்கூட்டும் இயந்திர மையங்கள் அமைக்க அழைப்பு

திருச்சி,மார்ச் 14: தமிழகத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியினை பெருக்கும் வகையில் ‘நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மைக்கான இயக்கம்” என்ற திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மானாவாரி நிலத் தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு தொகுப்பிற்கு 1,000 ஹெக்டர் வீதம், 1,000 தொகுப்புகளில் மேம்பாட்டுப் பணிகள் 2016-17 முதல் 2019-20 வரையில் 4 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளும் வகையில் ரூ.802.90 கோடியில் செயலாக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில், 2016-17ம் நிதியாண்டில் முதற்கட்டமாக ஏலூர் பட்டி, சிக்க தம்பூர், வாளவந்தி, தொட்டியபட்டி மற்றும் வி.பெரியபட்டி ஆகிய 5 மானாவாரி தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டது. அதில் 2017-18ம் ஆண்டில், தொகுப்பின் நுழைவு கட்டப் பணிகளான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைத்தல், கோடை உழவுப் பணிகள் மேற்கொள்ள விவசாயிகளுக்கு மானியம் வழங்குதல் ஆகியவை செயல் படுத்தப்பட்டு வருகின்றன.இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை, மதிப்புக் கூட்டி சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்து அதிக லாபம் பெறும் வகையில், மதிப்புக் கூட்டும் இயந்திரமையங்கள் அமைத்திட முதற் கட்டமாக மாநில அளவில் 200 தொகுப்புகளில் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 2017-18ம் ஆண்டில் 75 சத வீதம் மானியத்தில் 50 தொகுப்புகளில் அமைக்கப்படவுள்ளது.  இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த அரசாணையின் கீழ், திருச்சி மாவட்டத்தில் ஒருதொகுப்பில் மதிப்பு கூட்டு இயந்திர மையம் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. மானாவாரி தொகுப்புகளிலுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ், அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தி யாளர் குழுக்களுக்கு அந்தந்த தொகுதிகளில் உள்ள பயிர்களுக்கான விளை பொரு ட்களை மதிப்புக் கூட்டும் வகையிலான மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் மையம் அமைத்திட மானியம் வழங்கப்படவுள்ளது.   வேளாண் விளைபொருட்களை சுத்தப்படுத்தி, தரம் பிரித்து விற்பனைக் கேற்ற வகை யில் பேக்கிங் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வாங்குவதற்கும் மற்றும் அதற்குரிய பணி மூலதனம் ஆகியவை உள்ளிட்ட மொத்த தொகையில் 75 சதவீதம் அல்லது ரூ.10லட்சம் இதில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படும். மீதி 25சதவீதத் தொகையினை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்திக்குழு செலுத்த வேண்டும். மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை நிறுவுவதற்கும், பொருட்களை வைப்பதற்கும் உரிய இடவசதி, மின்சார இணைப்பு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தொகுப்புகளில் ஏதாவது அரசு கட்டிடங்கள் தேவை யான இடவசதியுடன் இருந்தால், வட்டார மேம்பாட்டுக் குழுவின் ஒத்துழைப் புடன் மாவட்ட கலெக்டரின் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவில் பரிந்துரை செய்யப்பட்டு, கட்டி டத்தின் வாடகை தொகையினை செலுத்தி, அவ்விடத்திலும் அமைத்துக் கொள்ளலாம்.மதிப்பு கூட்டுதலுக்கான அனைத்து நிலைகளுக்கும், அதாவது தானியங்களை சுத்தப் படுத்துதல் முதல் சிப்பம் கட்டுதல் (பேக்கிங்) வரைக்கும் தேவைப்படும் அனைத்து இயந்திரங்களையும் ஒரு தொகுப்பாக வாங்கி, சிறிய தொழில் மையம் அமைக்கலாம். மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்பிலுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு சேர்ந்து பெரிய அளவிலான மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் ரூ.10லட்சத்திற்கும் அதிகமான தொகையிலும் அமைக்கலாம்.  வேளாண் பொறியியல் துறையின் மூலம் விலை நிர்ணயம் செய்து அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து இயந்திரங்கள் வாங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.விண்ணப்பிப்பது எப்படி?…மதிப்புக் கூட்டும் இயந்திரம் மையம் அமைப்பதற்கு ஆர்வமுள்ள உழவர் உற்பத்தி யாளர் அமைப்பு அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுவினைத் தேர்வு செய்து சம்மந்தப்பட்ட மானாவாரி தொகுப்பு மேம்பாட்டுக் குழுவிற்கு வழங்க வேண்டும்.  தொகுப்பு மேம்பாட்டுக் குழு விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் சம்மந் தப்பட்ட வேளாண் பொறியியல் துறை, உதவி செயற் பொறியாளருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். விண்ணப்பித்துள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுக்கான தேவையான கட்டமைப்புகள் தேவைப்படும் இயந்திர விபரங்கள் மற்றும் ஆவணங்களை உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை சரிபார்த்த பின்னர் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கு கலெக்டர் தலைமை யிலான மாவட்ட அளவிலான குழுவின் ஒப்புதல் பெறப்படும்.ஆய்வு அறிக்கை…வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவன ங்களுக்கு உதவி செயற்பொறியாளரால் மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்கிட பணி ஆணை வழங்கப்படும். இயந்திரங்கள் வழங்கப்பட்டு, மதிப்புக் கூட் டும் இயந் திர மையம் அமைக்கப்பட்ட பின் உதவிசெயற் பொறியாளரால் ஆய்வு செய்யப் பட்டு இயந்திரங்கள் திருப்திகரமாக செயல்படுகிறது என்ற அறிக்கையினை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுவிடமிருந்து பெற்று நிறுவனங்களுக்கு தொகுப்பு மேம்பாட்டுக் குழுவின் மூலம் மானியத் தொகை விடு விக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு தங்கள் விண்ணப்பத்தினை சம்மந் தப் பட்ட தொகுப்பு மேம்பாட்டுக் குழுவிற்கு அளித்திட வேண்டும்.


Source: திருச்சி – Dinakaran

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*